கரூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கத்தினை
மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில், தொழிலாளர் நலத்துறை சார்பில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.


 




குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்க. 14 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்திடவும், அறிவார்ந்த இளைஞர் சமுதாயம் உருவாகிடவும், குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ம் தேதியினை குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத்தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.


 




இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்
எனவும் அரசு அலுவலர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.


 




 


இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), சீனிவாசன்(மகளிர்திட்டம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன், தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் ராமராஜ் (அமலாக்கம்) , ஹேமலதா(ச.பா.தி) மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண