கரூர் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது - எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஊராட்சிகளை இணைக்கும் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ⁠விவசாய மானியங்கள் போன்றவை பறிபோகும், சொத்து வரி, குடிநீர் வரி, வணிகவரி என அனைத்து வரி இனங்களும் பல மடங்கு உயரும்.

Continues below advertisement

கரூர் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

 


கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் ஏமூர் ஊராட்சிகளை இணைப்பதையும், லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை பள்ளபட்டி நகராட்சியுடன் இணைப்பதையும், வேலம்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இணைப்பதையும் கைவிட வலியுறுத்தியும், ஏழை எளிய மக்களுக்கான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ⁠இலவச ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம், ⁠இலவச வீடுகள் திட்டம், ⁠விவசாய மானியங்கள் போன்றவை பறிபோகும் என்பதை எடுத்துக்கூறி கிராம பொது மக்கள் சார்பாகவும், அதிமுக சார்பாகவும், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். 

 

 


முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் மற்றும் கிராம பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு, ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “கரூர் மாநகராட்சியில் அருகாமையில் உள்ள ஊராட்சிகளை இணைப்பது குறித்து தீர்மானங்கள் வைக்கப்பட்டபோது அந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே ஒரு ஊராட்சியான ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் பட்டியலில் இடம்பெறாத ஏமூர் ஊராட்சியும் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 


இதுகுறித்து அரசுத்துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினால் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் அதிமுக ஊராட்சி தலைவர்கள் இருப்பதால் மாற்றப்படுகிறது என தகவல் வருகிறது தற்போது இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு ஊராட்சிகள் மட்டுமல்ல எந்த ஊராட்சியையும் கரூர் மாநகராட்சி கூட இணைக்க கூடாது.




 

ஊராட்சிகளை இணைக்கும் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், ⁠இலவச ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம், ⁠இலவச வீடுகள் திட்டம், ⁠விவசாய மானியங்கள் போன்றவை பறிபோகும். மேலும் சொத்து வரி, குடிநீர் வரி, வணிகவரி என அனைத்து வரி இனங்களும் பல மடங்கு உயரும். இதனால் ஏழை பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆறு ஓரங்களுக்குள் ஆட்சேபனை இருந்தால் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 

 


ஊராட்சிகளை இணைக்க கூடாது என கிராம பொதுமக்களின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களுடன் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்க இருக்கிறோம். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். மேலும், 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் மீண்டும் ஊராட்சியாகவே மாற்றப்படும்” என்றார்.

Continues below advertisement