கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 18 ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கினால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் சாரதாம்பாள். இவர் ஆடுகளை வளர்த்து வந்த நிலையில், இரவு 35 செம்மறி ஆடுகள் மற்றும் ஐந்து செம்மறியாடு குட்டிகளை பட்டியில் அடைத்து, அதன் அருகில் ஒரு சேவல்கோழியினையும் அடைத்து அப்பெண்மணி வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில், தோட்டத்தில் வந்து பார்த்த பொழுது செம்மறி ஆடுகள் மற்றும் சேவல்களை விலங்கு ஒன்று கடித்துள்ளது. இதில் 18 செம்மறி ஆடுகள், மற்றும் ஒரு சேவல் ஆகியவைகளை மர்ம விலங்கு கடித்ததில் உயிரிழந்துள்ளது. மேலும் 7 செம்மறி ஆடுகள் காயம் அடைந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர்.
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் செம்மறி ஆடு வளர்ப்பு கால்நடை விவசாயிகளுக்கு பிரதான தொழிலாக இருக்கிறது. இந்த நிலையில் இது போன்ற மர்ம விலங்குகள் எது என்பது புரியாத நிலையில் அதை பிடித்து விவசாயிகளின் பீதியை நிவர்த்தி செய்ய வேண்டுமென்பது விவசாயிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாக எழுந்துள்ளது.