ஆன்லைன் ரம்மி தடை செய்ய வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மத்திய தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பெரியசாமி தலமையில் ஆன்லைன் ரம்மியை தடை விதிக்க வலியுறுத்தியும் ஆன்லைன்ல ரம்மிக்கு தடைவிதித்து ஒப்புதல் வழங்காத ஆளுநரை கண்டித்து தூக்கு மாட்டிக்கொண்டு நூதன முறையில் தமிழக அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்காத ஆளுநரை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
ஆன்லைன் ரம்மியால் கூலித் தொழிலாளி முதல் அனைத்து தரப்பினரும் பல லட்ச ரூபாய் கடனாக பணத்தைப் பெற்று ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து கடன் கட்ட முடியாமல் பலரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆன்லைன் ரம்மியை தடை விதித்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது இதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார். எனவே ஆளுநர் ரவி உடனடியாக ஆன்லைனில் ரம்மிக்கு தடைவிதித்து ஒப்புதல் வழங்க வேண்டும் மேலும் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இதுபோன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சித்தன் என்ற ராணுவ வீரர் கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில் உடல் சிதறி வீர மரணம் அடைந்தார். அப்போதைய ஆட்சியர் 1969 ஆம் ஆண்டு ஓமலூர் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் 2 ஏக்கர் 92 சென்ட் நிலம் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வழங்கினார். தற்பொழுது 51 வருடங்கள் ஆகியும் அரசு வழங்கிய நிலத்திற்கு பட்டா வழங்கப்படாமல் அரசு நிர்வாகம் அலைக்கழித்து வருவதாகவும் அந்த குடும்பத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கை குழந்தைகளுடன் வைத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் மண்டியிட்டு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த அவர்கள் கூறும் போது, நிலத்திற்கு 30 ஆண்டுகளாக நிலவரி சொத்துவரி என செலுத்தி வருகிறோம் இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரரின் சித்தன் வாரிசான வசந்தகுமார் ஆகிய எங்கள் குடும்பத்திற்கு பல ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வருகிறோம் ஆனால் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் 51 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசுக்கு வேண்டும் என நிலத்தை எடுப்பதாக கூறி அங்கு புதியதாக காவல் நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவது அதிர்ச்சளிப்பதாக உள்ளது என்றும், எங்களை ஏமாற்றும் நோக்கில் அரசு செயல்படுவது வேதனை அளிக்கிறது என்ற அவர்கள், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசான எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் அவ்வாறு அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களை கருணை கொலை செய்து விட வேண்டும் என தெரிவித்தனர்.