பணியில் இருந்து உடல் நலக்குறைவால் திடீரென்று உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் ஒருங்கிணைந்து ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பணியே மகேசன் பணி என செய்து வரும் ஓய்வில்லா காவல்துறை பணியாற்றும் பொறுப்புள்ள காவலர்களின் பணியை போற்றும் விதமாக பல்வேறு இடங்களில் காவல்துறை குடும்பத்திற்கு காவல்துறை நண்பர்களே இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், கரூரில் பணியில் இருந்தபோது உடல்நலக் குறைவாக உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர். அதன்படி, அவர் பணியாற்றிய காவல் நிலையத்தில் பணி புரியும் காவல்துறை நண்பர்கள் இணைந்து அவர்களால் முடிந்த உதவியை பணியில் இருந்த போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்துள்ளனர். இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சக காவலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த நிகழ்வுகளை விரிவாக காண்போம்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் அருள் பிரபுதாஸ் (39). இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகள் காவலராக பணிபுரிந்துள்ளார். கடந்த 08.12.2023 அன்று பணியில் இருந்த போது உடல்நலக் குறைவு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் அருள் பிரபுதாஸ் இவரது பெற்றோரை அழைத்து அரவக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் ரூ. 20 லட்சத்தை பெற்றோர்கள் பெயரில் டெபாசிட் செய்தும், 5 லட்சம் ரூபாயை ரொக்கமாக கையில் கொடுத்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்த 4787 காவலர்கள் ஒன்றிணைந்து அருள் பிரபுதாஸ் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினர். அரவக்குறிச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இது போல பணியில் இருக்கும்போது உயிரிழந்த 25 பேருக்கு இது போல நிதி உதவி வழங்கி உள்ளனர். இது போல் கரூர் மாவட்டத்தில் பணியில் இருந்து உடல் நலக்குறைவால் காலமான காவலர் குடும்பத்திற்கு தங்களால் முடிந்த உதவியை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.