கரூர் மாநகராட்சி 48 வார்டு கொண்ட பகுதியாகும். கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் கடந்த 28 ஆம் தேதி மற்றும் 29ஆம் தேதி யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனினும் ஒரு ரூபாய் கொடுத்து விருப்ப மனுவை வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் இன்று வரை வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கரூர் மாநகராட்சி மட்டும் 124 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.
மாவட்டம் முழுவதும் 424 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சிகள் என்ற விதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. கரூர் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் பெண் மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தலால் அதிமுக, திமுக, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சியினர் முழு முனைப்புடன் தங்களது வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர்.
கரூர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் 3 இடங்கள் ஒதுக்கியது. இந்நிலையில் இன்று மதியம் அந்த மூன்று இடத்திற்கும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் 24 வயதுடைய சட்டம்க்கல்லூரி மாணவி கிருத்திகா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணன் புறத்தில் வசித்து வரும் கிருத்திகாவின் பாலகிருஷ்ணன் விவசாயியாக உள்ளார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் அலுவலக உதவியாளராகவும் பகுதிநேரமாகவும் கிருத்திகா பணியாற்றி வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் அதில் வேட்பாளராக களம் இறங்குவது குறித்தும் ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் பேசிய கிருத்திகா, ராகுல் காந்தி அவர்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்திய நாட்டை புதிய உற்சாகத்தில் கொண்டு செல்ல இருப்பதால் எனக்கு இந்த வாய்ப்பு வழங்கி உள்ளனர்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய ராகுல் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோருக்கு தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கிருத்திகா தெரிவித்தார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
கடந்த வாரத்தில் திமுக காங்கிரஸ் கட்சியின் இறுதி கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலைஞர் அறிவாலயத்தில் இருந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியே வந்தார். பின்னர் தலைமையுடன் பேசி மீண்டும் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 வார்டுகளில் பெற்ற இந்த நிலையில் 24 வயதுடைய கல்லூரி மாணவி கிருத்திகா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.