கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட  ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.


கருர் தனியார் மண்டபத்தில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் ஓருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா  முன்னிலை வைத்தார்.


 




 


மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்


மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரின் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகப்பேறு காலம் மிகவும் மகிழ்ச்சியான ஒரு காலம் நாம் செய்யக்கூடிய ஆரோக்கியமான ஒவ்வொரு பழக்க வழக்கமும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். நமது ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும். உங்கள் பிரசவத்தை மருத்துவமனையில் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான தடுப்பூசி மற்றும் மருத்துவ உதவிகளை அரசு உங்களுக்கு வழங்குகிறது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் வருங்கால தூண்கள் குழந்தைகள் தான் அதற்காக நீங்கள் கர்ப்ப காலத்தில் நல்ல குழந்தைகளை உருவாக்குவதற்காக நல்ல நிலைமையில் நல்ல உணவுகளை நல்ல மனநிலையில் உட்கொள்ள வேண்டும். குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். சமூக நலத்துறையின் சார்பாக நடத்தக்கூடிய மிக மிக முக்கியமான நிகழ்வு இது. கரூர் மாவட்டத்தில் பொக்கிஷம் என்ற திட்டத்தின் மூலம் கர்ப்ப காலத்தில் ஊட்டசத்து குறைவு உள்ள பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆறு மாதத்தில் 2000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஊட்டச்சத்துபெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.  மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஒவ்வொரு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியிலும் உங்களுக்கு சிறப்பான ஒரு சீர்வரிசையை வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் .


 




 


 


கரூர் மாவட்டத்தில் உள்ள 5447 கர்ப்பிணி பெண்களில் கடைசி மும்மாதத்தில் உள்ள எட்டு வட்டாரங்களை சார்ந்த 1250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக கரூர் தாந்தோனி மற்றும் க.பரமத்தி வட்டாரங்களை சார்ந்த 500 கர்ப்பிணி பெண்களுக்கு இன்றைய தினம் வழங்கப்படுகிறது.


முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து தொடர்பான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து அங்கன்வாடி குழந்தைகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.


கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான கலவை சாதங்களுடன் சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.  மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அவர்கள் சார்பாக  500 கர்ப்பிணி பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.


 


 




 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத்,  மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகலெட்மி,  கருர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ரூபினா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், கரூர் வட்டாட்சியர் திரு.சிவக்குமார்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.