கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகர்மன்ற கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.


 




கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் இன்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் முனவர்ஜான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் , நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதியில் உள்ள குறைகளை கூட்டத்தில் பேசினர். கூட்டத்திற்கு வந்த பள்ளப்பட்டி நகராட்சி துணைத் தலைவர் கையெழுத்து போட்டுவிட்டு சென்றுவிட்டார். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக திமுகவை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் பஷீர் அகமது மற்றும் 26 ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் பேசிக் கொள்ளும் ஆடியோவில், துணைத் தலைவர் திமுகவை சேர்ந்த நகராட்சி பெண் தலைவரை ஆபாசமாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் இருதரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. மேலும், இன்று நடைபெற்ற கூட்டத்தில் சுயேட்சை உறுப்பினர் சாகுல் ஹமீது துணைத் தலைவர் ஆதரவு கவுன்சிலர்கள் அவரை எதிர்த்துப் பேச முடியாமல் உள்ளதாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த துணைத் தலைவர் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் சுயேட்சை கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு ஆனது.


அதனை தொடர்ந்து கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த சுயேட்சை கவுன்சிலரிடம் ஆடியோ வெளியிட்டது குறித்து, பள்ளப்பட்டி திமுக துணைத் தலைவர் ஆதரவாளர்கள் மற்றும் நகராட்சி திமுக உறுப்பினர்கள் ஒன்று திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.




இதில் காயமடைந்த சுயேட்சை கவுன்சிலர் சாகுல் ஹமீது பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் 4-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் ராதிகா, இளைஞர் நலன் மற்றும் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும் தெரிவித்து  தீர்மானம் கொண்டுவந்தார்.


 கிருஷ்ணராயபுரம் 4-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் ராதிகா இளைஞர் நலன் மற்றும் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும் தெரிவித்து கொடுத்த தீர்மானத்தை பேரூராட்சி செயல் அலுவலர், மற்றும் தலைவர் ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சசிகுமார் தீர்மானம் கொடுப்பதனால் முன்னதாகவே கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது


இந்த சாதாரண கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட மொத்தம் 13 தீர்மானத்தில் வரவு செலவு தீர்மானம் 14வது தெரு மூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டு திருமதி ராதிகா கொண்டு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 13 வது தீர்மானமாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.