கரூரில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை எனக்கூறி, திமுக அரசை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கரூர் தாலுகா அலுவலகம் முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், தமிழ் மொழிக்கு திமுக அரசு முக்கியத்துவம் தரவில்லை எனவும், தாய்மொழியான தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக கூறி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில பொறுப்பாளருமான சி. பி. ராதாகிருஷ்ணன் கண்டன உரை நிகழ்த்தினார். 


 


 



 


இந்நிகழ்வில் மாவட்ட அளவிலான கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழ் மொழிக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாகவும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் தமிழ் மொழியை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


 



கரூரில்  திமுக அரசை கண்டித்து, சி. பி. ராதாகிருஷ்ணன் கண்டன உரை


தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திடீரென கடந்த வாரத்தில் மத்திய அரசு தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களில் திமுக சார்பாக இந்தி வேண்டாம் என்ற நிலையில், பல்வேறு திமுக தலைவர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை  வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைநகரங்களில் தமிழக திமுக அரசு தமிழை அழிக்க நினைக்கிறது.


உடனடியாக தமிழைக் காப்பாற்ற பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தாலுகா அலுவலகம் முன்பு, தமிழக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். கரூர் தாலுக்கா அலுவலகம் அருகே நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டம் பற்றிய விவரங்களை தற்போது காணலாம்


 




 


தமிழக பள்ளி, கல்லூரிகளில் கட்டாயமாக, மொழிப்பாடமாக ஹிந்தியை கொண்டு வர வேண்டும் என்று பாஜக கூறியது . இதனை எதிர்த்து பல்வேறு கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இதில் திமுக முக்கிய பங்கு வகித்தது. ஆதலால், இப்போது கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவுக்கு எதிராக பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.


இன்று பாஜக கட்சி சார்பில், கரூர் தாலுகா அலுவலகம் முன்பு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கு பெற்று போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு போலீசார்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடப்பதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.