90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 10 மணி நில வரப்படி 87 அடிக்கு நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து, 855 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 6,100 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதில் ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி நீரும், வாய்க்கால்களில் 100 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அமராவதி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் செல்கிறது. ஆற்றில் உள்ள தடுப்பணைகள் யாவும் நிரம்பி நீர் ஆர்ப்பரித்து பாய்கிறது. இந்த நீர் கரூர் வழியாக திருமுக்கூடலுார் என்ற இடத்தில் காவிரியாற்றில் கலக்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் மாயனூர் தடுப்பணைக்கு வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 2 லட்சத்து 100 கனஅடி நீர் வெளியேறிக் கொண்டுள்ளது. மாயனூர் தடுப்பணைக்கு மதியம் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 லட்சத்து 15 ஆயிரத்து 870 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. தடுப்பணையிலிருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 2 14 ஆயிரத்து 750 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளது. காவிரி கரையோரம் உள்ள தவிட்டுபாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பு கருதி மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்