உடுமலை அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்ட பாசன நிலங்களின் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை வாயிலாக கரூர், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஜூலை 15ஆம் தேதி அணை நிரம்பி நீர்வரத்து அடிப்படையில் அணியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது அமராவதி அணையில் இருந்து பழைய ஆயகட்டு அலங்கியம் முதல் கரூர் வரையிலான, 10 கால்வாயில்,21, 867 ஏக்கர் நிலங்களுக்கும், புதிய ஆயகட்டுபாசன வாசனத்துக்குஉட்பட்ட 25, 250 ஏக்கருக்கு பிரதான கால்வாயிலும் நீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்படி, நேற்று அணையில் இருந்து, 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. வரும் 2023 பிப்ரவரி மாதம் வரை 135 நாட்களில் 70 நாட்கள் திறப்பு. 65நாட்கள் அடைப்பு என தகுந்த இடைவெளி விட்டு, சம்பா சாகுபடிக்காக நீர் வழங்கப்படும். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நங்கஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நிலவரப்படி தண்ணீர் 37.39 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 33.07 கன அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு , நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.04 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் திறக்கப்பட்ட, தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இன்று மழை நிலவரம்.
கரூர் மாவட்டத்தில் இன்று மழையின் நிலவரத்தில் கரூரில் 17.0 மில்லி மீட்டாகவும், கே. பரமத்தியில் 8.0 மில்லி மீட்டாகவும், குளித்தலையில் 7.0 மில்லி மீட்டராகவும், தோகை மலையில் 5.0 மில்லி மீட்டராகவும், கே. ஆர். புறத்தில் 04.0 மில்லி மீட்டராகவும் , மாயனூரில் 1.0 மில்லி மீட்டராகவும், பஞ்சபட்டியில் 7.2 மில்லிமிட்டாகவும், கடவூர் பகுதியில் 11.4 மில்லி மீட்டாகவும், பாலவிடுதியில் 12.4 மில்லிமீட்டராகவும், மயிலம்பட்டியில் 18.0 மில்லிமிட்டாகவும், மழையின் அளவு பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக கரூர் மாவட்டத்தில் இன்று 91.00 ஆக மழையின் அளவு பதிவாக உள்ள நிலையில் சராசரியாக 7.58 மில்லி மீட்டராக மழையின் அளவு பதிவு என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்த நிலையில் திடீரென இன்று பெய்த மழையால் பல்வேறு தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள் தங்களது பணிகளை மேற்கொண்டனர்.