தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


வட கிழக்கு பருவமழை தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.


பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கினார்.


Also read: Chennai Rain : கொளுத்தி எடுத்த வெயிலுக்கு வெய்ட்டீஸ்.. சென்னையில் இந்த இடங்களில் குளிரவைக்கும் மழை..


ஆலோசனை கூட்டம்:


இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில்,  வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த முதலமைச்சர்  ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றனர்.






இக்கூட்டத்தில் வட கிழக்கு பருவமழை, சில வாரங்களில் தொடங்கவுள்ளது. அதையோட்டி பருவ மழையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினார். வருவாய்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கினார்.






இந்த முறை சென்னையில் முக்கிய இடங்களில் மழைநீர் தேங்காது என நம்புவதாகவும், அதற்காக அதிகாரிகள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார்.


Also read: TN Rain: தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா?


 



அவர்கள் தலைமையில் நடைபெற்றது.