கரூர் அமராவதி ஆற்றின் இருகரையையும் தொட்டு செல்லும் தண்ணீர்.
அமராவதி அணையில் இருந்து 2,238 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கரூர் அமராவதி ஆற்றின் இருகரைகளையும் தண்ணீர் தொட்டு செல்கிறது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.
இதனால் இந்த பகுதிகளில் நெல், கரும்பு, மஞ்சள், மக்காச் சோளம், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்கின்றனர். இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.
8,852 கனஅடி நீர் நீர்வரத்து.
இந்தநிலையில் 8,852 கனஅடி நீர் நீர்வரத்து அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி 2.442 கன அடி தண்ணீர் வந்தது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து 2,238 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும் கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அமராவதி ஆற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் கரூர் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி 8,852 கனஅடி தண்ணீர் வந்தது. கரூர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதனை கரூர் அமராவதி பாலத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் நின்று பார்த்து செல்கின்றனர்.
மாயனூர் கதவனை
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு முன்தினம் வினாடிக்கு 49 ஆயிரத்து 840 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 41 ஆயிரத்து 37 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசனத்துக்கு 40 ஆயிரத்து 337 கன அடி தண்ணீரும் 3 பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
நங்காஞ்சி அணை
நங்கஞ்சி அணைக்கு வடக்காடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு 114 கன அடி தண்ணீர் வந்தது. நங்காஞ்சி ஆற்றில் வினாடிக்கு 20 கான அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 33.37 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 37.86 அடியாக இருந்தது.
பொன்னணியாறு அணை
கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து. இல்லை 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 28.06 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 1.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
கார்வாழி ஆத்துப்பாளையம் அணை
கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி 13 கன அடி தண்ணீர் வந்தது 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.14 அடியாக இருந்தது. மழை காரணமாக நீர்வரத்து அதிகம் உள்ளதால் ஆத்துப்பாளையம் அணை இன்று முழுவதுமாக நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அணை நிரம்பும் பட்சத்தில் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது