அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி மாணவன் குளிக்க சென்ற போது உயிரிழந்தார். தடுப்பணையிலிருந்து தவறி விழுந்த மாணவர் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.




கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சேந்தமங்கலம் கீழ் பாகம், குரும்பபட்டி அஞ்சல், ரெங்கப்பகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அபினேஷ் (19). இவர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை தனது உறவினர்களான அசோக் குமார் (17) சதீஷ்குமார் (32) பிரகாஷ் (27) ஆகியோருடன் நங்காஞ்சி ஆற்று தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளனர்.


மாலை 5 மணி அளவில் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள நங்காஞ்சி ஆற்று தடுப்பனையில் வழிந்து ஓடும் தடுப்பணை ஆற்று நீரில் குளிக்க சென்றார். அப்போது தடுப்பனையில் தவறி,‌ தண்ணிக்குள் விழுந்துள்ளார். அருகில் இறந்தவர்கள் அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  1.30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் மாணவனை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.




வேகமாக சென்ற பைக் மோதிய விபத்தில் பள்ளி சிறுமி பலி.


கரூர் மாவட்டம், ஓசூர் அருகே அதிவேகமாக  வந்த பைக் மோதிய விபத்தில் பள்ளி சிறுமி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி காவல் சரகம் கொசூர் அருகே உள்ள மத்த எரி ஊராட்சி குள்ளரங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி ஆசிரியர். இவரது மகளான அனுசியா திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வெள்ளைப்பட்டி ஊராட்சி பண்ணப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதில் முருகேசன் அனுசியா தம்பதிக்கு பிறந்த கீர்த்திகா என்ற பெண் குழந்தையை ராமசாமி தனது வீட்டில் பராமரித்து வந்துள்ளார். இதில் கிருத்திகா சிறு வயது முதல் தனது தாத்தாவான ராமசாமி வீட்டில் இருந்து அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்துள்ளார். பின்னர் கிருத்திகா தற்போது ஆறு வயது கடந்துவிட்ட நிலையில் குள்ளரங்கம்பட்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்து உள்ளார்.




இந்நிலையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் கிருத்திகா ஏற்கனவே, படித்து வந்த அங்கன்வாடி மையத்துக்கு சென்று உள்ளார். அங்கு மதியம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் தனது தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக கொசு வீரப்பூர் மெயின் ரோட்டில் உள்ள குள்ளரங்கம்பட்டி அங்கன்வாடி மையம் அருகே கிருத்திகா நின்று கொண்டிருந்தார். அப்போது மணப்பாறை அருகே வீரப்பூர் பூசாரிபட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் மகேஸ்வரன் என்பவர், அதே ரோட்டில் ஓசூரில் இருந்து வீரப்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக ஓட்டி வந்து கிருத்திகா மீது மோதி உள்ளார்.  இதில் தூக்கி வீசப்பட்ட கிருத்திகா உடலில் பலத்த காயம் பட்டு உயிருக்கு போராடி உள்ளார்.  இதனால் அறையில் இருந்த உறவினர்கள் கீர்த்திகாவை மீட்டு மகிழம்பட்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலம் இன்று கிருத்திகா நேற்று இறந்தார். இது குறித்து கிருத்திகாவின் தாத்தா ராமசாமி சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் மகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.