கரூர் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், இளைஞர்களும் அப்துல்கலாமின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், கரூரில் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ரத்ததான முகாம்கள் நடைபெற்று வருகிறது.
கரூர் பேருந்து நிலையம் அருகே ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இயக்கத்தின் சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அப்துல் கலாம் சமூக சேவை இயக்கத்தின் சார்பாக கலாம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பிறகு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சமூக சேவை இயக்கத்தின் நிறுவன தலைவர் வேல்முருகன் மற்றும் சமூக சேவகர் பாஸ்கர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நாளை கண்ணமுத்தாம் பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் அப்துல் கலாம் சமூக சேவை இயக்கத்தின் சார்பாக முத்தான முதலாம் ஆண்டு மாபெரும் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது எனவும், இந்த போட்டியில் மினி மாரத்தான் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1000 மீட்டர் ஆண்கள், பெண்களுக்கு என போட்டிகள் நடைபெற உள்ளதாகவும், மேலும், சைக்கிள் அதிவேக பதியவும், பள்ளி மாணவ, மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, நடன போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது எனவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.