CM Speech: ”கல்லூரி மாணவி சத்யஸ்ரீக்கு நடந்த துயரத்தை கண்டு மன வேதனை அடைந்தேன். சத்யஸ்ரீ மரணம் போன்ற சம்பவங்கள் இனி யாருக்கும் நடக்கக்கூடாது” என முதலமைச்சர் ஸ்டாலின் வேதனையுடன் பேசியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ”சமூக கல்வி அவசியம் என கல்லூரி மாணவி சத்யஸ்ரீ கொலையை சூட்டிக் காட்டி பேசியுள்ளார். தன்னை போன்று மற்ற உயிரையும் காக்கும் பக்குவம் மக்களுக்கு வர வேண்டும்” என்று கூறினார்.
கல்லூரி மாணவி மரணம்
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தோழிகளுடன் நின்றுக் கொண்டிருந்த மாணவி சத்யஸ்ரீயை, சதீஷ் என்ற இளைஞர் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். இதில் ரயிலில் சிக்கி மாணவி சத்யஸ்ரீ உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சத்யஸ்ரீ தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஆந்திரத்தில் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததாக இளைஞர் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். சத்யஸ்ரீ உயிரிழந்த செய்தியை கேள்விப்பட்ட தந்தை மாணிக்கம், மகளை நினைத்து கதறியுள்ளார். இந்த நிலையில் மகளின் இழப்பை ஏற்க முடியாமலும் பிரிவை தாங்கி கொள்ள முடியாமலும் தந்தை மாணிக்கம் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் மாணவி சத்யஸ்ரீரியை ரயில் முன் தள்ளிவிட்டு தப்பியோடிய சதீஷை துரைப்பாக்கத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷை சைதாப்பேட்டை குற்றவியர் நீதிமன்றத்தில் போலீசார் அடைத்தனர். இளைஞர் சதீஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில், புழல் சிறைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவி சத்யஸ்ரீ கொலை வழக்கை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
மாணவி மரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை
"மாணவி சத்யஸ்ரீக்கு நடந்த துயரத்தை கண்டு மன வேதனை அடைந்தேன். சத்யஸ்ரீக்கு நடந்த சம்பவம் போன்று இனி எந்த பெண்ணுக்கும் நடைபெறக் கூடாது”எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, "ஆண்களின் வலிமை என்பது பெண்களை மதிக்கவும், பாதுகாப்பை தரக்கூடியதாக இருக்க வேண்டும். சில இளைஞர் என்ன மாதிரியாக வளர்கிறார்கள் என்பது மாணவி சத்ய ஸ்ரீ உயிரிழப்பு உணர்த்துகிறது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெற்றோர்கள் இளைய சக்தியை பாதுகாத்து வளர்க்க வேண்டும். மேலும் நல்ல ஒழுக்கம், பண்பும் கொண்டவர்களாக இளைஞர்கள் வளர வேண்டும். நல்ல விதமாக வளர்ந்து சமூகத்துக்கு பங்களிப்பை அளிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் எந்த வகையில் திசை மாற்றாமல் நல்வழியில் செல்வதே பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்" எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.