கரூர் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் கைதை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.




கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் இந்து முன்னணி அமைப்பு மாவட்ட பொறுப்பாளர் சக்தி தீபாவளி பண்டிகைக்கு இந்துக்கள், இந்துக்களின் கடைகளில் மட்டும் பொருட்கள் வாங்க வேண்டும் என துண்டு பிரசுரங்கள் அப்பகுதியில் கொடுக்கப்பட்டது என்று கூறி, வெங்கமேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டு வெள்ளியணையில் வைத்து விசாரணை நடத்தி நேற்று இரவில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.




இந்த நிலையில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் சக்தி கைதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மாநில துணைத்தலைவர் தலைமையில் வெங்கமேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த 30-க்கும் மேற்பட்ட அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் இந்து முன்னணி கொடி ஏந்தியவாறு வந்தனர்.





அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று காவல்துறையால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் கைதை கண்டித்தும், தீபாவளி பண்டிகைக்கு இந்து கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் எனவும், எனது காசு எனது உரிமை என கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் காவல்துறையினரால் 30க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.