கரூரில் 2ஆம் ஆண்டாக நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் செந்தில், ராஜலட்சுமின் நாட்டுப்புற இன்னிசை கச்சேரி நடைபெற்றது.


 




 


கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 ம்  ஆண்டாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழாவில் சுமார் 80க்கும் அதிகமான அரங்குகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள் வரலாறு, இதிகாசம், ஆன்மீகம், இலக்கியம், சுற்றுலா, புதினங்கள் என பல்வேறு தலைப்புகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


 


 




இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர் பகல் வேளையில் இந்த புத்தக கண்காட்சியை மாணவ, மாணவிகள் கண்டுகளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஆளுமைகள் பங்குபெறும் நிகழ்ச்சிகளும் தினசரி மாலையில் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில்  நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலட்சுமியின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


 





 


அதேபோல கோளரங்கம், குறும்பட திரையிடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் புத்தக திருவிழாவில் நடைபெற்று வருகின்றன. நல்ல புத்தகங்களை வாங்குவது மட்டும் இல்லாமல், இலக்கிய நிகழ்வுகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கெடுத்து ரசித்து வருகின்றனர்.