கன்னியாகுமரியில் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, நாளை (நவம்பர் 4) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


 ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை  


இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


அதேபோல் நாளை மறுநாள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 6 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை,  தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் வரும் 8ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. 


இதை அடுத்து கன்னியாகுமரியில், நாளை (நவம்பர் 4) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


சிதம்பரம் (கடலூர் மாவட்டம்) 8, அண்ணாமலை நகர் (கடலூர் மாவட்டம்), மாஞ்சோலை (திருநெல்வேலி மாவட்டம்), ராதாபுரம் (திருநெல்வேலி மாவட்டம்), காக்காச்சி (திருநெல்வேலி மாவட்டம்) தலா 7, களியல் (கன்னியாகுமரி மாவட்டம்), திருப்பூர் தெற்கு (திருப்பூர் மாவட்டம்), நாலுமூக்கு (திருநெல்வேலி மாவட்டம்) தலா 6, தென்காசி, கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) தலா 5, கொள்ளிடம் (மயிலாடுதுறை மாவட்டம்), சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்), பரமக்குடி (இராமநாதபுரம் மாவட்டம்), பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்), சிதம்பரம் (கடலூர் மாவட்டம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்), தங்க ராமநாதபுரம் தலா 4, ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை மாவட்டம்), தொண்டி (இராமநாதபுரம் மாவட்டம்), மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.