அமைச்சருக்கு எதிர்ப்பு:
கன்னியாகுமரி மாவட்டம் குமரா கோயில் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி இன்று தேர் திருவிழா நடைபெற்றது ,தேர் வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எஸ் பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
வைகாசி திருவிழா:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வேளிமலையில் அமைந்துள்ளது தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமாரகோயில் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டதோறும் வைகாசி விசாக திருவிழா தேரோட்டத்துடன் நடைபெறுவது வழக்கம் இந்த வருட வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று தேரோட்ட திருவிழா நடைபெற்றது
பாஜவினர் எதிர்ப்பு:
இன்று நடைபெறும் தேர் திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைக்க இருந்த நிலையில் மாற்று மத சிந்தனையுடைய அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம் பிடித்து இழுக்க கூடாது என பாஜவினர் மற்றும் சில இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீசார் குவிப்பு:
இதனால் மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதற்கு நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி மற்றும் அர்ஜூன் சம்பத் தலைமையில் பாஜகவினர் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால் இந்து அமைப்பினர் மற்றும் போலீசாரிடையே கடும் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. கடும் வாக்குவாதத்திற்கு இடையே திமுக வினர் மற்றும் போலீசார் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்
பாஜகவினர் கைது:
இதற்கு பாஜக வினர் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உட்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read: Tamilnadu Covid Cases: தமிழ்நாட்டில், இன்று 217 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்