திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போளுர் தொகுதிக்குபட்ட இமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் பூபாலன் இவருடைய மனைவி பச்சையம்மாள் இந்த தம்பதியினருக்கு ராஜமணி வயது (18) மற்றும் ராஜ்குமார் ஆகிய 2மகன்கள் உள்ளனர். இதில் டிரைவர் பூபாலன் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கொரோனா தொற்று காலத்தில் உடல் நிலைசரியில்லாமல் இறந்துவிட்டார்.அதனைத்தொடர்ந்து தங்களுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் உழுது, பச்சையம்மாள்,ராஜாமணி மற்றும் ராஜ்குமார் ஆகிய இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பச்சையம்மாள், சிறுநீரகம் செயலழிந்து நோய்வாய்பட்டு இறந்துவிட்டார்.
மேலும் அடுத்தடுத்து பெற்றோர் இறந்ததால் 2 மாணவர்கள் தற்போது யாருடைய ஆதரவின்றி கேட்பாரற்று தன்னடைய சிறிய மண் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ராஜமணி பெரியகொழுப்பலூர் கிராமத்தில் அரசு பள்ளியில் 12வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதிபட்டு வருகின்றார். ராஜ்குமார் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றார்.மேலும் இந்நிலையில் பசி கொடுமையில் சிக்கிய பெற்றோரை இழந்த 2 மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் தற்போது ராஜமணி டிராக்டர் ஒட்டுனர் பணிக்க சென்று தன்னுடைய தம்பியை படிக்கை வைக்க முயற்சி செய்து வருவதாகவும் தற்போது ஊதியம் சரிவர கிடைக்காத காரணத்தினால் வீட்டில் மின்சாரம் கட்டணம் கட்ட கூட வழியில்லாமல் கிடைத்த உணவை உண்டு வாழ்ந்து வருவதாகவும் வேதனையுடன் மாணவர்கள் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர்.
ABP NADU குழுமத்தில் இருந்து ராஜாமணியிடம் பேசுகையில்;
எங்களுடைய பெற்றோர் அடுத்தடுத்த உயிரிழந்துவிட்டனர். நாங்கள் இருவரும் ஆதரவற்ற நிலையில் உள்ளோம். ஆனால் எங்களுடைய தாத்தா, பாட்டி ஆகியோர் எங்களுடைய கிராமத்தில் வசித்து வருவதால், எங்களுக்கு சற்று ஆதரவாக உள்ளது. எங்களுடைய தாத்தா, பாட்டி வயதானவர்கள் அவர்கள் வேலைசெய்து சம்பாதிக்கும் பணம் அவர்களுக்கே போதுமானதாக உள்ளது இதனால் அவர்களிடம் உதவி கேட்பது எங்களுக்கு மனமில்லை. எனக்கு என்னுடைய, தந்தை டிராக்டர் ஓட்ட கற்று கொடுத்துள்ளார். அதனை வைற்று என்னுடைய தந்தையை போன்று நான் டிராக்டர் ஓட்டி வருகிறேன். நான் டிராக்டர் ஓட்ட சென்றால் உழவு ஓட்டினால் ஏக்கருக்கு 350 ரூபாய் மற்றும் நாற்றாங்கால் ஓட்டினால் 430 ரூபாய் எனக்கு கிடைக்கும். இதனை வைத்துக்கொண்டு நான் என்னுடைய தம்பியுடன் வாழ்ந்து வருகிறோம்.
மேலும் என்னுடைய தம்பி 9 வகுப்பு படிக்கிறான். அவனது படிப்பு தொடரவேண்டும் என்பதற்காக நான் வேலை செய்கிறேன். அவன் என்னை போன்று அவனது படிப்பும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால், நான் டிராக்டர் ஓட்டுகிறேன். எங்களுடைய விவசாய நிலத்தில் நெல் விதி துள்ளேன் கூடிய விரைவில் அதனை அறுவடையும் செய்ய உள்ளேன். நாங்கள் இருவரும் வசிக்கும் குடிசை வீடு, எப்போது வேண்டுமானாலும் சாய்யும் நிலையில் உள்ளது. குடிசை வீட்டின் மீது பிளாஸ்டிக் தார்பை கொண்டு மூடி வைத்துள்ளோம் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் தலையீட்டு பெற்றோரை இழந்து தவிக்கும் 2மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரி படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று ஊர் கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக முதல்வருக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டோம் ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் அவருடைய நேர்முக உதவியாளர் கணேசனிடம் தொடர்பு கொண்டு பேசுகையில் இந்த 2 மாணவர்கள் பற்றி எந்த விதமான தகவல்களும் வரவில்லை தற்போது அந்த பகுதி தாசில்தாரிடம் கூறி 2 மாணவர்களுக்கும் தேவையானவற்றை மாவட்ட நிர்வாகம் செய்து தரும் என்று தெரிவித்தார்.