காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் 39 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 6.34 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

Continues below advertisement

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 03-ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்று வருகிறது. சமூகம், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவே இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 03-ம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

மாற்றுத்திறனாளிகளை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களின் பங்களிப்புகளை கொண்டாடுவதற்கும் அவர்களின் முன்னேற்றத்தினை ஊக்குவிக்கவும் இவ்விழா ஒரு சிறந்த முன்னுதாரணமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இத்தினவிழாவில் மாற்றுத்திறனாளிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தி அவர்களின் தனித்திறமைகளை வெளிகொணரும் பொருட்டு இத்தினவிழா நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

Continues below advertisement

காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம்

அந்த ஆண்டு மாற்றுத்திறனாளி தின விழாவில், மாற்றுத்திறனாளிகள் நடத்திய கலை நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி குதூகலமாக நடனமாடியும், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கண்கலங்கி மாற்றுத்திறனாளிகள் கலைநிகழ்சியை கண்டு மகிழ்ந்தனர். 

கண் கலங்கிய அமைச்சர் காந்தி 

இந்நிகழ்வினை தொடர்ந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கலைநிகழ்ச்சிகள் நடத்திய குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கி பாராட்டினார். மாற்றுத்திறனாளிகள் கலைநிகழ்ச்சியில் குத்துக்களமாக நடனமாடிய நடனத்தை அமைச்சர் காந்தி நடனமாடி உற்சாகம் அடைந்தனர்

சில மாற்றுத்திறனாளி குழந்தைகள் நடனத்தை கண்டு அமைச்சர் காந்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் கண் கலங்கினர். ஒரு கட்டத்தில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைச்சரும் கைகளை அசைத்து நடனமாடியது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கண்கலங்கியது மட்டுமில்லாமல், செல்போனில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நடனமாடியதை வீடியோவாக பதிவு செய்தார். கலை நிகழ்ச்சி நடத்திய அனைத்து குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நல திட்ட உதவிகள்

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3.15 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.30 இலட்சம் மதிப்பிலான திறன் பேசியும், 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 36,000/- மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளும், 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.47,000/- மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளும், 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.30,000/- மதிப்பிலான காதொலி கருவிகளும், 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.76,000/- மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளும் என 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.34 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் வழங்கினார்கள். இந்நிகழ்வினை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடத்திய குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கி பாராட்டினார்.