சென்னை ஓட்டலில் பெண்களை வைத்து விபச்சாரம் !! இளம் பெண் கைது - பரபரப்பு கைதுகள்

Continues below advertisement

சென்னை காவல் விபச்சார தடுப்புப் பிரிவு - 1 காவல் ஆய்வாளர் தலைமையிலான  காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் வடபழனி சீதாம்மாள் தெருவிலுள்ள, ஒரு ஓட்டலில் உள்ள அறையை கண்காணித்த போது அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி அறையில் சோதனை செய்து, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த அருள்ராஜ் ( வயது 47 ) என்பவரை கைது செய்தனர்.

Continues below advertisement

அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு , பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 1 பெண்  மீட்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அருள்ராஜ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மெட்ரோ இரயில் கட்டுமான பணிக்கு வைத்திருந்த இரும்பு பொருட்கள் மற்றும் கேபிளை திருடிய 3 நபர்கள் கைது. 60 கிலோஇரும்பு பொருட்கள் மற்றும் கேபிள் மீட்பு. இருசக்கர வாகனம் பறிமுதல்

சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த ஜாபர் ( வயது 50 ) என்பவர் தனியார் நிறுவனம் மூலம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மெட்ரோ இரயில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் Security Officer ஆக பணிரிந்து வருகிறார். இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் மேலே குறிப்பிட்ட பகுதியில் கட்டுமான பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்கள் மற்றும் கேபிள்களை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

அவ்வாறு தப்பி செல்ல முயன்ற போது , ஜாபர் அங்கு பணியிலிருந்த ஊழியர் உதவியுடன் மடக்கிப் பிடித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துரைப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட விக்னேஷ், தமிழரசன், ரஞ்சித்குமார் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 60 கிலோ இரும்பு பொருட்கள் மற்றும் 30 மீட்டர் கேபிள் மீட்பு மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் விக்னேஷ் மீது ஏற்கனவே 5 வழக்குகளும், தமிழரசன் மீது 3 வழக்குகளும், ரஞ்சித்குமார் மீது 2 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.