தனது சொந்த கதர் ஆடை நிறுவனம் ஜனவரி 26ஆம் தேதி ஆன்லைக்கு வருகிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.


கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கதர் ஆடை விற்பனையாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களைக் கண்டு காதி பிராண்ட் நிறுவனம் ஒன்றைத் தொடங்க  ஆவல் ஏற்பட்டதாக கூறி, நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 4  நிகழ்ச்சியில் கதர் ஆடை நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார். HOUSE OF KHADDAR என்ற பெயரில் அந்த பிராண்டை தொடங்கினார்.


இந்த நிலையில், கதர் தொடர்பான தொழிலை தொடங்க அமெரிக்காவின் சிகோகாவிற்கு கமல்ஹாசன் சென்றார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில், தறி கெட விடமாட்டோம். நன்னூல் காப்போம் என குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள போட்டோவில்  காந்தியின் இளம் வயது புகைப்படத்துடன் கூடிய Fashion is being civil  yet disobedient வாசகமும் இடம் பெற்றுள்ளது.


இதனைத்தொடர்ந்து, HOUSE OF KHADDAR நிறுவனத்தின் தொடக்கத்திற்கான முன்னோட்டமாக கடந்த நவம்பர் மாதம் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. 



இந்த நிலையில், தனது காதர் ஆடை நிறுவனம் புதிய அறிவிப்பை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நமது குடியரசு தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவோம். KHHK உங்களிடம் வருகிறது. கதர் கொண்டாடுங்கள், எங்களை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி. #KHHK ஜனவரி 26 ஆம் தேதி ஆன்லைனில் வருகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.


 


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண