ஒவ்வொரு வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத மற்றும் வாழ்வை மாற்றும் நிகழ்வு ஆகும். இதன் காரணமாக, சிலர் தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாகவும், சிலர் தங்களது பொருளாதார சூழலுக்கு ஏற்பவும் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருமணத்தின் முக்கிய அங்கமாக திகழும் திருமண அழைப்பிதழுக்கு மட்டும் சில குடும்பங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர்.
சமீபகாலமாக இன்றைய இளைஞர்கள் திருமண அழைப்பிதழ்கள் இணையத்தை கவரும் விதத்தில் அசர வைக்கின்றனர். தற்போது, கள்ளக்குறிச்சியில் உள்ள வடக்கனந்தலில் நடைபெற உள்ள திருமணத்திற்காக அடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த திருமண அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பதாவது, “ என்னப்பா விசேஷம்.. கல்யாணம்ப்பா.. யாருப்பா மாப்பிள்ளை..! நம்ம ஹீரோ கண்ணதாசன்..! யாருப்பா பொண்ணு..! நம்ம ஹீரோயின் நவீனா..!
எப்போ கல்யாணம் – 29.08.2022. நேரம் காலை 4 முதல் காலை 6.30 மணி வரை
எங்கப்பா கல்யாணம் – ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயம், வடக்கனந்தல்
மேலும் படிக்க : பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல்; குடும்பத்துடன் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் தஞ்சம்
Monday-ல வச்சிருக்கீங்க… கண்டிப்பா வரணுமா… கண்டிப்பா எப்படியாவது Monday லீவு போட்டு துன்ப்பப்ட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு, பஸ்சோ, ட்ரெயினோ, ப்ளைட்டோ புடிச்சு வரணும்னு சொல்லமாட்டேன்.. நீங்க வரலேனா எங்களுக்கு சோறு மிச்சம்… இருந்தாலும் நீங்க கண்டிப்பா வந்து சேந்துடுங்க…
என்னப்பா சாப்பாடு :
ஓடுறது, தாவுறது. நடக்குறது, பறக்கறது இதையெல்லாம் போடனும்னு எங்களுக்கு ஆசைதான்.. ஆனால் நான் வெஜ் போடக்கூடாது. அதனால வெஜ் மட்டும்தான்
கிப்ட் ஏதாவது வாங்கிட்டு வரணும்மா பா… நீங்க அன்போடு நகையை கொடுத்தாலும் சரி.. நீங்க பாசத்தோடு பணத்தை கொடுத்தாலும் சரி.. எதை கொடுத்தாலும் வாங்கிக்கோனு என் மனசு சொல்லுது.. நீங்க வந்தா மட்டும் போதும்.. நீங்க வந்தா மட்டும் போதும்..!
எல்லாம் சரி பாஸ்… சரக்கு உண்டா..
அய்யோ சரக்கா…! “
திருமண அழைப்பிதழில் மிகவும் சுவாரஸ்யமாக இவ்வாறு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்கப் போறீங்களா..? முதலில் இதை பாருங்கள்...!
மேலும் படிக்க : 15 வயது சிறுவன் கொடுத்த தகவலால் பரபரப்பான காஞ்சிபுரம்.... காவலர் செய்த சம்பவம்..!