கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி விழுந்ததாக கூறப்படும் இடத்தில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் மரணித்ததது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். பள்ளியில்  மாணவி விழுந்ததாக கூறப்படும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சிபிசிஐடி குழுவினர் ஜியாஉல்ஹக் தலைமையில் ஆய்வு செய்தனர்.


அப்பொழுது மாணவி தங்கி இருந்த விடுதியின் அறை மற்றும் அவர் பயன்படுத்திய பகுதிகள், மேலும் அவர் விழுந்ததாக கூறப்படக்கூடிய இடங்களையும் கூர்ந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாணவியை போல் உருவ பொம்மையை தயார் செய்து அதை மாடியில் இருந்து  குதிக்க வைத்து பரிசோதனை செய்தனர். மேலும் மாணவி கிடந்த இடத்தில் தன்மை, விழுந்த இடத்தின் தூரம் உள்ளிட்டவைகளை பதிவு செய்து கொண்டனர்.



நண்பகல் 12 மணிக்கு வந்த சிபிசிஐடி குழுவினர் மூன்று மணி நேரம் பள்ளி வளாகத்தில் இருந்து ஆய்வு பணியை செய்தனர். அதேபோல்  மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனையை மருத்துவர்கள் குழுவினர் செய்தனர். மாணவியின் மறு உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையை நாளை  உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ குழுவினர் தாக்கல் செய்ய உள்ளனர்.


நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் இந்த பிரேத பரிசோதனை, வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் மறு உடற்கூராய்வு பரிசோதனை நிறைவடைந்ததை மருத்துவ குழு சார்பில் பள்ளி மாணவி பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவி உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படும் எனவும் மருத்துவ குழுவினர் தகவல் செய்யவுள்ளனர்.



கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் மறு உடற்கூராய்வு நிறைவடைந்தது. தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மரணித்த மாணவியின்‌ உடல் மறு உடற்கூராய்வு மூன்று மணி நேரத்திற்கு மேல் இந்த பரிசோதனை நடைபெற்றது.  கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடற்கூராய்வு பரிசோதனை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் தொடங்கியது. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பரிசோதனை மாலை 7.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த உடற் கூராய்வை விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி மருத்துவர் ஜூலியட் ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல்நாத், தடவியல் நிபுணர் சாந்தகுமார் ஆகிய அடங்கிய குழுவினர் மறு  பரிசோதனை செய்தனர். மேலும் இந்த பரிசோதனையானது சிபிசிஐடி எஸ்பி ஜியாஉல் ஹக் மற்றும் ஏடிஎஸ்பி கோமதி முன்னிலையில் நடைபெற்றது.



முன்னதாக, மாணவியின் பெற்றோருக்கு உடற் கூராய்வு தொடர்பாக தகவல் அறிக்கை உயிரிழந்த மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டது. அதில் மாணவி பெற்றோர் சார்பில் தந்தை இந்த பரிசோதனையில் பங்கு பெறலாம் என்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெற்றோர் தரப்பில் இந்த மறு உடற்கூராய்வு பரிசோதனையில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண