கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இந்த விவகாரம் வெளியே வந்த 14-ந் தேதி முதலே சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு வந்தது. இதில், டுவிட்டரில் #ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும், #justiceforsrimathi #todaysrimathiwhoistmrw என்று பல்வேறு ஹேஷ்டக் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. 3 நாட்களாக வெளியான பதிவுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் தகவல்கள் வெளியானது. அதேபோல் சில சினிமா படங்களை குறிப்பிட்டு அதுபோன்ற தண்டனை விதிக்க வேண்டும் என்று பதிவுகள் வெளியாகி வந்தது.



Kallakurichi | கலவரத்துக்கு ஸ்ரீமதி அம்மாதான் பொறுப்பு..சக்தி பள்ளி செயலாளர் சாந்தி பரபரப்பு பேட்டி


இவ்வாறு சமூக வலைதளத்தில் இருந்த குமுறல்கள் நேற்று முன்தினம் பூதாகரமாக வெடித்து, பிரச்சினைக்கு உரிய பள்ளியே தீக்கிரையாகின. மாணவர்கள் சமூகம் தான் போராட்டக்களத்தில் உள்ளது என்று மென்மையாக கையாண்டு விடலாம் என்று போலீசார் எண்ணி இருந்தனர். ஆனால் விளைவு, போராட்டக்களம் போர்க்களமாக மாறிவிட்டது. இதனால் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் 55 போலீசார் படுகாயமடைந்தனர். இதன்பின்னர் தான், சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து இந்த கலவரத்தை அரங்கேற்றி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.



அதோடு, வாட்ஸ்-அப் குழுக்கள் பற்றிய விசாரணையின் மூலம் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் கலவரத்தில் பங்கெடுத்து இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, விழுப்புரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை, தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 3 நாட்களாக விவாதிக்கப்பட்ட சமூக வலைதள பதிவுகளை உளவுத்துறையினர் சரியாக கண்காணித்து செயல்பட்டு இருந்தால், இந்த வன்முறையை பெரியளவில் இல்லாமல் தடுத்து இருக்க முடியும் என்கிற கருத்துகளையும் சிலர் முன்வைத்து வருகிறார்கள்.


இதுஒருபுறம் இருக்க தற்போது சமூக வலைதள பதிவுகள் மூலமாகவும், கைது நடவடிக்கையில் போலீசார் இறங்கி இருக்கிறார்கள். இதனால் அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைதாவார்கள் என்று காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சைபர்கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுசம்பந்தமாக நாமக்கல், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சமூகவலைதளங்களில் தகவலை பரப்பியதாக சிலரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.


Kallakurichi Issue : ”புள்ளைய கண்ணுல காட்டுங்க” கள்ளக்குறிச்சியில் கைதானவர்களின் பெற்றோர் கதறல்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண