கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள காளசமூத்திரம் பகுதியில் புதுச்சேரியில் இருந்து 29 பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து பயணிகள் அயர்ந்து உறக்கத்தில் இருந்த நேரத்தில் திடீரென சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துகுள்ளானது. சொகுசு பேருந்தின் வலது புறம் அமர்ந்திருந்த ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேருக்கு கை ,கால் துண்டிக்கபட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக மீட்டு அனுப்பி வைத்தனர்.மேலும் கை ,கால் இழந்தவர்கள மேல் உட்பட 7 பேர் மேல் சிகிச்சைகாக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தில் இரண்டு டி எஸ் பி க்கள் தலைமையிலான போலிசார் விபத்து நடந்த வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்