புதுச்சேரி: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராய இறப்பு குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றத்தை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளதாகவும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி கருனாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று 17 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக சுகாதார துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் நேரில் சந்தித்து அவரது குடும்பதினருக்கு ஆறுதல் கூறினார். ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் எம் எஸ் துரைராஜ் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சருக்கு தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ம. சுப்பிரமணியன்


கள்ளக்குறிச்சியில் பாதிக்கபட்டவர்கள் 168 பேர் என்றும்  அதில் 9 பெண்கள் ஒரு திருநங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டதாக தெரிவித்தார். கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்து  சிகிச்சை அளித்து வருவது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து சிகிச்சை பெர தயங்கியவர்கள் 55 பேர் மருத்துவமனை அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் 168 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். விஷ சாராயம் அருந்தி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  உயிரிழந்த குடும்பத்தாருக்கு இல்லங்களுக்கே சென்றே பத்து லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வழங்கியதாக கூறினார்.


கள்ளக்குறிச்சிக்கு மருத்துவமனைக்கு 67 மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டு மருத்துவம் 24 மணி நேரமும் பார்த்து வருவதாகவும், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உள்ளதாகவும் கூடுதலாக 50 படுக்கைகளும் உள்ளதாக தெரிவித்தார். இதில் சேலத்தில் 31 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதில் 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், போதிய மருந்துகள் இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.


கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றத்தை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்  மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளதாகவும் ,அவர் ஓம் பரிசோல் கையிருப்பு இல்லை என கூறுயிருக்கிறார் அந்த மருந்துகள் போதிய அளவு உள்ளதாகவும் இதில் 4 கோடியே 42 மாத்துரைகள் கையிருப்பு உள்ளது. எதிர்கட்சிகள் இதில்  அரசியல்  செய்யக்கூடாது என கூறினார். விஷ சாராய பாதிப்பால் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு  எத்தனால் ஊசி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருவதாகவும்  விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஜிப்மர் மருத்துவமனையை பொருத்தவரையில் 9 ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதில் 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மரக்காணம் சம்பவத்தை பொறுத்தவரை 21 பேர் கைது செய்யபட்டு 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யபட்டதாகவும் ஆண்டிடோட் மருந்து இல்லை என அன்புமனி ராமதாஸ் கூறுவது தவறு, அந்த மருந்து இருக்கா இல்லையா என்பதை யாராவது மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என அன்புமணி விமர்சனத்திற்கு அமைச்சர் சுப்பிரமணி பதில் தெரிவித்துள்ளார்.