கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு 27 முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரின் மரணத்தை தொடர்ந்து அப்பகுதியில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு அப்பள்ளியிலிருந்த பொருட்கள் உட்பட பள்ளி வளாகத்தை மிகவும் சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி மூடப்பட்டிருந்தது. 


இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் பணியாற்று வரும் அந்தப் பள்ளியை எப்போது திறப்பு என்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமார் உடன் ஆலோசனை நடத்தினார். அந்தப் பள்ளியில் பயின்று வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களின் நலன் கருதி பள்ளி திறப்பு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 


இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மேலும் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரின் பெற்றோர்களையும் கலந்து ஆலோசனை செய்த பிறகு என்ன முடிவாக இருந்தாலும் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த பள்ளியில் சேர்ந்து கல்வியை தொடர வேண்டும் என்றாலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 


அதேபோல் இந்த பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் தீயில் எறிந்த சான்றிதழ்கள் அனைத்தும் விரைவில் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். இதற்காக சிறப்பாக மாவட்ட அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு எந்தெந்த மாணவர்களுக்கு தேவை என்பது கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 


முன்னதாக மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சட்டப்போராட்டம் நடத்திய  அவரது பெற்றோர்  நீதிபதியின் அறிவுறுத்தலுக்குப் பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறும், இறுதிச்சடங்குகளை விரைவாக முடிக்கும்படியும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்திருந்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண