கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளிப்பேருந்து வறண்ட ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவ மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.