தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சியை தொடர்ந்து 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதே திமுக, மாநிலத்தில் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஆலோசனை கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி டெல்லிக்கு சென்றிருந்தார்.


தமிழ்நாட்டின் வளர்ச்சி:


அத்தகைய கூட்டம் ஒன்றில், மத்திய அமைச்சகங்களில் பணிபுரியும் மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சந்தித்தார். அப்போது மூத்த அதிகாரி ஒருவரிடம், "அணுமின் நிலையம் அமைப்பதற்கு என் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது உண்மைதான். ஆனால், 10,000 ரூபாய் மதிப்பிலான திட்டம் தமிழ்நாட்டை விட்டு சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த திட்டத்தின் மூலம் பல வேலைவாய்ப்புகள் உருவாகும். சுற்றுச்சூழல் குழுவை அமையுங்கள். படிப்படியாக இந்த போராட்டங்கள் அமைதியாகிவிடும். பின்னர், திட்டத்தை தொடங்கிவிடலாம்" என கருணாநிதி கூறினார்.


பல ஆண்டுகளுக்கு பிறகு, அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது. அங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், மாநிலத்திற்கு ஓரளவுக்கு
உதவியது. ஆனால், அதற்கு பின்னரும் கூட, 2011ஆம் ஆண்டு, கருணாநிதியும் அவரது கட்சியும் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதை நியாயப்படுத்தும் விதமாக பேசிய அவர், "திமுக எப்போதும் தொழில்துறை வளர்ச்சியை அறிவியல் முறையில் ஆதரிக்கிறது" என விளக்கம் அளித்தார்.


கருணாநிதி எகனாமிக்ஸ்:


கருணாநிதி, இதே வியூகத்தை 1996ஆம் ஆண்டு முதலமைச்சராக வந்த பிறகும் வெளிப்படுத்தினார். முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதாவின் ஆட்சி காலம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது. அமெரிக்காவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டின் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க அவர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்கியிருந்தது அரசு. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தை தடுக்க கருணாநிதி எந்த முயற்சியும் செய்யவில்லை. 


சொல்லபோனால், ஒரு படி மேலே சென்று, தென் கொரியாவை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் தொடங்கி வைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் செய்தார். இது மற்ற வாகன உதிரிபாக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஆட்டோமொபைல் துறையின் தலைநகரமாக சென்னை மாறுவதற்கு இதுவே காரணமாக அமைந்தது.


ஆனால், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, 1970களின் முற்பகுதியில், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, ​​தொழில்துறை வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டை மிகவும் பன்முகத்தன்மை கொண்ட மாநிலமாக மாற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


வளர்ச்சிக்கான அடித்தளத்தை போட்ட திமுக ஆட்சி:


1960களில் காங்கிரஸ் ஆட்சியின் போது தொழில்துறை அமைச்சராகவும் பின்னர் நாட்டின் குடியரசு தலைவராக பதவிவகித்த ஆர். வெங்கட்ராமன், தொழில்பேட்டை என்ற திட்டத்தை ஊக்குவித்து அத்தகைய தொழிற்சாலைகள் அமைவதற்கான நிதி ஆதாரத்தை வழங்கும் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். 


அவரது நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவரான எஸ். மாதவன், "மாநிலம் முழுவதும் பெரிய தொழில் பூங்காக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், மாநில அரசை ஒரு பங்குதாரராக மாற்றும்" திட்டத்தை முன்வைத்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, 1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும் மாநில அரசு அறிவித்த சலுகைகள் காரணமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த மின்னணு துறை, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது.


முன்னாள் மத்திய நிதிச் செயலாளரும், பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பொருளாதார ஆலோசகரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான எஸ்.நாராயண், "தி திரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு" என்ற தன்னுடைய புத்தகத்தில், "70களில் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறியீடு கணிசமாக அதிகரித்தது.


1970 மற்றும் 1976 க்கு இடையில், மாநில உள்நாட்டு உற்பத்தி 17 சதவீதம் வளர்ந்தது, தனிநபர் வருமானம் சுமார் 30 சதவீதம் உயர்ந்தது. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 39.5 சதவீதமாக இருந்த எழுத்தறிவு விகிதம் 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 54.4 சதவீதமாக உயர்ந்ததுய அதே சமயம் குழந்தை இறப்பு விகிதம் விகிதங்களும் குறைந்தன.


எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், வளர்ச்சிக்கான அடித்தளம் திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.