கரூர் காமராஜபுரம் பகுதியில் உள்ள பிஎஸ்கே பில்டர்ஸ் இன்ஜினியர் அலுவலகத்தில் இன்று புதிதாக சோதனை மேற்கொண்டனர். அந்த அலுவலகத்திலிருந்து கம்ப்யூட்டர், சிபியூ மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.


 




கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலங்களில்  8-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், கரூர் மாநகர், காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான BSK பில்டர்ஸ் என்ற இன்ஜினியர் அலுவலகத்தில் வருமானவரி சோதனை தொடங்கியது. 


இரண்டு வாகனங்களில் வந்த 6 வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது கம்ப்யூட்டர், சிபியூ மற்றும் ஆவணங்களை சீல் வைத்த பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றனர் .


 




 


மேலும், கரூர் லாரிமேடு பகுதியில் உள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன்  அலுவலகத்தில் காலை இரண்டு அட்ட பெட்டியில் ஆவணங்கள் எடுத்து சென்றனர். மற்றும் கரூர் காமராஜபுரம் பகுதியில் உள்ள பி எஸ் கே பில்டர்ஸ் இன்ஜினியரிங் அலுவலகம் சோதனை நடைபெற்று வரும் நிலையில் கம்ப்யூட்டர் சிபியூ உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண