Kailasa PM Ranjitha: பிரதமர் ஆனார் நடிகை ரஞ்சிதா.. கைலாசாவில் திடுக் திருப்பம்...! நடந்தது என்ன?

பிரபல சாமியார் நித்யானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாட்டில் நடிகை ரஞ்சிதா பிரதமராகப் போகும் செய்தி இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Continues below advertisement

பிரபல சாமியார் நித்யானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாட்டில் நடிகை ரஞ்சிதா பிரதமராகப் போகும் செய்தி இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Continues below advertisement

நித்தியானந்தாவும், கைலாசாவும்:

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா பாலியல் வழக்கு உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு  இந்தியாவிலிருந்து தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து நித்யானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாகியதாக அறிவித்தார். அந்த நாடு எங்கே இருக்கிறது என்பதை தொழில்நுட்பங்கள் மாறிவிட்ட இன்றைய யுகத்தில் கூட யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

அதேசமயம் கைலாசா நாட்டின் கொடி, சின்னம், நாணயம், வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் என பலவற்றையும் வெளியிட்டு, ‘பேசாமல் நாமளும் கைலாசாவுக்கே போய் விடலாமா?’ என பொதுமக்களை எண்ண வைத்தார். இதுதொடர்பான மீம்ஸ்களும் ரெக்கை கட்டி பறந்தன. இன்றளவும் கைலாசா நாட்டின் நிகழ்வுகள் நேரலையாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றது. அவ்வப்போது நித்யானந்தா நேரலையில் தோன்றி சொற்பொழிவும் ஆற்றுவார். 

பிரதமர் ஆன ரஞ்சிதா:

மேலும் கடந்தாண்டு நித்யானாந்தாவிற்கு உடல் நலம் கடுமையாக பார்திக்கப்பட்டது. அவர் ஜீவசமாதி அடைய உள்ளதாக கூட சொல்லப்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் பொய்யாகும்படி மீண்டு வந்தார், மீண்டும் வந்தார் நித்யானந்தா. இதற்கிடையில் கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் ஐ.நா.சபை மாநாட்டில் பங்கேற்று பேசியதாக வெளியான புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. 

இப்படியான நிலையில் கைலாசா நாட்டின் பிரதமர் யார் என வெளியாகி இருக்கும் அறிவிப்பு இணையவாசிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. ஆம்.. தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகி, நித்தியானந்தாவுடன் சர்ச்சையில் சிக்கிய ரஞ்சிதா தான் கைலாசா நாட்டின் பிரதமர்.  இது கைலாசாவின் லிங்க்டு இன் இணையதளப் பக்கத்தில் ரஞ்சிதாவின் போட்டோவுடன் ,  நித்யானந்தா மாயி சுவாமி என்ற தலைப்பில் குறிப்பிட்டு கீழே "கைலாசாவின் பிரதமர்" என்று இடம் பெற்றுள்ளது. 

நித்தியானந்தா நாட்டை விட்டு வெளியேறியபோது ரஞ்சிதாவுடன் அவருடன் கைலாசா நாட்டுக்கு சென்றார். தீவிர சிஷ்யையான அவரை நித்தி பிரதமராக்கி உள்ளாரா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். 

Continues below advertisement