கரூர் புகலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆய்வு மேற்கொண்டார்.


 


 



கரூர் புகலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆய்வு மேற்கொள்ள வந்த நிலையில் செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமலும் இருசக்கர வாகனத்தின் வண்டி சாவிகளை பிடுங்கி செய்தியாளர்களை தாக்கிய பாதுகாவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் புகளூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.


 




 


இந்த நிலையில் இன்று தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆய்வு மேற்கொள்ள வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்தியாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்காக சென்ற பொழுது அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் உள்ளே சென்ற செய்தியாளர்களை டி என் பி எல் பாதுகாப்பு காவலர்கள் தடுத்து நிறுத்தி இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்து உள்ளே செல்லக்கூடாது  என்றும் ஆக்ரோசமாக வெளியே தள்ளி தாக்கிய பாதுகாவலர்கள், இதனால் செய்தியாளர்களுக்கும்  பாதுகாப்பு காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


 


 




குறிப்பாக  திமுகவினர் வாகனங்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி வழங்கப்பட்டுள்ளது செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் புகளூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டி என் பி எல் தொழிற்சாலையில் இதுவரை எந்த செய்தியாளர் சந்திப்பும் நடத்தப்படவில்லை துறையின் அமைச்சர் ஆய்வு செய்ய வந்தாரா? அல்லது வேறு எதற்கு வந்துள்ளார் என்பது அப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.