இந்தியாவையே உலுக்கிய சாத்தான்குளம் விவகாரம் குறித்தும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டது குறித்தும் கட்டுரை வெளியிட்ட பத்திரிகையாளர் பிரபாகர் தமிழரசுக்கு மனித உரிமைகள் பிரிவில் சிறந்த பத்திரிகையாளர் விருதை மும்பை பத்திரிகையாளர் மன்றம் அறிவித்துள்ளது. 


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் சில பத்திரிகைகள் காவல்துறையின் இந்த கொடூரத்தை உரக்கச் சொன்னது. இந்த நிலையில் இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாக கவனித்து ”The Federal" பத்திரிகையில் கட்டுரை வெளியிட்ட த்திரிகையாளர் பிரபாகர் தமிழரசுக்கு மனித உரிமைகள் பிரிவில் சிறந்த பத்திரிகையாளர் விருதை மும்பை பத்திரிகையாளர் மன்றம் அறிவித்துள்ளது. 




விடிய விடிய காவல் நிலையத்தில் என்ன நடந்தது? நிர்வாணமாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொடூரமாக தாக்கப்பட்டதையும், அதற்கான நேரடி சாட்சியையும் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகர். இந்நிலையில் மும்பை பத்திரிகையாளர் மன்றம் வழங்கும் Red Ink விருது, மனித உரிமைகள் பிரிவில் பிரபாகருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 5 பேர் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் இருவருக்கு இந்த விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 


 >>பிரபாகர் எழுதிய கட்டுரையை படிக்க...


அதன்படி  குமார் சம்பவ் என்ற பத்திரிகையாளருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஆளும் பாஜகவின் மோடி அரசின் துறை ரீதியான புள்ளி விவரங்கள் அடங்கிய கட்டுரையை ஹஃப்ஸ்பாட்டில் வெளியிட்டு இருந்தார். சிறந்த பத்திரிகையாள விருதை வென்ற பத்திரிகையாளர் பிரபாகருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், மும்பை உயர் நீதிமனத்தில் சீனியர் கவுன்சில் அஸ்பி சினாய், மூத்த பத்திரிகையாளர் அனுராக் சதுர்வேதி ஆகியோர் மனித உரிமைகள் பிரிவுக்கான தேர்வாளர்களாக இருந்து மேற்கண்ட இருவரையும் தேர்வு செய்துள்ளனர். விருது தேர்வாளர்களில் முதன்மையானவராக இந்து குழுமத்தின் கிருஷ்ண பிரசாத் உள்ளார். 







ரெட் இங்க் விருது: (Red Ink Awards)


ரெட் இங்க் விருது என்பது இந்திய பத்திரிகையாளர்களை கவுரப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் கொடுக்கப்படும் விருது ஆகும். மும்பை பத்திரிகையாளர் மன்றம் இந்த விருதை வழங்கி கவுரவம் செய்கிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண