1. ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம் என்பவரின் மகன் முருகன் (வயது25). இவர் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து இருந்தாராம். இவரது விண்ணப்பங்களை பரிசீலித்த போது அவரது பெயரில் சான்றிதழ்கள் மற்றும் முகவரி ஆவணங் களை பயன்படுத்தி ஏற்கனவே பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி போலீ ஆவணம் கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

 

2. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கைக்குளத்தின் கரைகளை பலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதேபோல் 20 ஆண்டுக்கு பின் நிரம்பிய காவல்கிணறு அருகே உள்ள மணிமாலையன் புதுக்குளம் உடையும் சூழலில் உள்ளதால் மறுகால் வசதியை ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

3. தேர்தல் வாக்குறுதிப்படி சிவகங்கையில் சட்டக் கல்லூரி தொடங்க வலியுறுத்தி, முதல்வருக்கு வழக்கறிஞர் சங்கம், வர்த்தகர் சங்கம், ஆசிரியர் அமைப்புகள், விவசாயிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 30 அமைப்புகள் இணைந்து கோரிக்கை மனுவை அனுப்பினர்.

 

4. திருநெல்வேலி - மதுரை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரை சுங்கச்சாவடிகளில் வரி வசூல் செய்வதை நிறுத்தி வைக்க கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

5. அதிக வெள்ளம் மற்றும் வறட்சியை கையாளும் வகையில் சீனா, சிங்கப்பூர் மலேசியா போன்று sponge city construction முறையை அமல்படுத்த கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

6. விருதுநகர் பி.ஆர்.சி டிப்போ அருகில் பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை. மோப்பநாய் உதவியுடன் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர். 

 

7. 'ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் பணம் வழங்குவது குறித்து  அரசு தான் முடிவு செய்ய வேண்டும்' என, அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் தெரிவித்துள்ளார்.

 

8.நாகர்கோவில் - திரு வனந்தபுரம் ரயில் பாதை யில் குழித்துறை அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத் தில் மாற்றம் செய்யப்பட் டுள்ளது.

 

9.'மதுரை - ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யும்' -  என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

 

10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும்  11 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75460-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 10 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74152-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1182 இருக்கிறது. இந்நிலையில் 126 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.