கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா எட்டாம் தேதி கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்கியது. திருவிழாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா 48- பூத்தட்டுகள் கலந்து கொள்கின்றன.



 


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு  ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழா மிக பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு விடுதல் நிகழ்ச்சியில் பல்லாயிர கணக்கான பொதுமக்கள் கூடி வழிபடுவது வழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. அதனால் கரூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களும் வேதனையில் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோவில்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.




 


பக்தர்கள் ஆற்றில் நீராடி புனித நீர் மற்றும் பால் குடம் தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் கொண்டு வந்து மகிழ்வுடன் கம்பத்திற்கும் மாரியம்மனுக்கும் ஊற்றி செல்கின்றனர்.




 


கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.




 



கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 48- இடங்களிலிருந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்‌. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து, ஜவகர் பஜார் ,மார்க்கெட், மாரியம்மன் ஆலயம் வரையிலும் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.




 


பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் சமூக விரோதிகள் ஊடுருவாமல் கண்காணிக்கவும் பாதுகாப்பு பணியில் இரண்டு ஏடிஎஸ்பி, 5-டிஎஸ்பி, ஒன்பது காவல் ஆய்வாளர்கள், 30- துணை ஆய்வாளர்கள் தலைமையில், ஊர்க்காவல் படை மற்றும் ஆயுதப் படைப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வைகாசிப் பெருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூச்செரிதல் விழாவை காண கரூர் நாமக்கல் திருச்சி திண்டுக்கல் ஈரோடு சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்மீக பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருந்து கண்ணுக்கு விருந்தாக இந்த பூச்செரிதல் விழாவை கண்டு ரசித்தனர்.