தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு  மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


21.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்)  கூடிய லேசானது முதல்  மிதமான மழை  பெய்யக்கூடும்.


22.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய து முதல்  மிதமான மழை   பெய்யக்கூடும்.


23.03.2023 முதல் 25.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை   பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


 கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


போளூர் (திருவண்ணாமலை), சாத்தூர் (விருதுநகர்) தலா 7, மண்டபம் (ராமநாதபுரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 6, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), டேனிஷ்பேட்டை (சேலம்), மாதவரம் AWS (திருவள்ளூர்) தலா 5, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), கமுதி (ராமநாதபுரம்), ஓமலூர் (சேலம்) தலா 4, ஆரணி (திருவண்ணாமலை), குப்பணம்பட்டி (மதுரை), திருவண்ணாமலை, பவானி (ஈரோடு), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), சோழவரம் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), மேலாளத்தூர் (வேலூர்) தலா 3, விருதுநகர் AWS (விருதுநகர்)), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), விருதாச்சலம் (கடலூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), குமாரபாளையம் (நாமக்கல்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), சோழவந்தான் (மதுரை), சேத்பேட்டை (திருவண்ணாமலை), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), வாடிப்பட்டி (மதுரை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்), குப்பநத்தம் (கடலூர்), துவாக்குடி (திருச்சி), ராமநாதபுரம், ஆண்டிபட்டி (மதுரை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), மஞ்சளார் (தேனி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), குடியாத்தம் (வேலூர்), கலவை PWD (இராணிப்பேட்டை), வத்திராயிருப்பு (விருதுநகர்), பாபநாசம் (திருநெல்வேலி), அன்னவாசல் (புதுக்கோட்டை), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 2 செ. மீ மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.