கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்- குறைந்த சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு என இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் துறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிப்பே, இனிய சுவைகளின் மகுடமாகத் திகழ்கிறது. மனம் மகிழும் போதெல்லாம் இனிய அனுபவங்கள் என்றே அழைக்கிறோம். இனிப்பை நுகர்வோர்க்கு வழங்குவதில் முன்னணி வகிக்கிறது சர்க்கரை.
சர்க்கரைத் தொழிலிலும் அக்கறை காட்ட ஆர்வம் மிகுந்தது தமிழ்நாடு அரசு. சர்க்கரை ஆலைகளும், கரும்புப் பயிரும், உழவர் பெருமக்களின் சமூக, மேம்பாட்டுக்கு உறுதுணையாக பொருளாதார இருப்பதன்மூலம் வேலைவாய்ப்பு உருவாகி, மனிதனின் வருவாய் அதிகரிக்க ஆதாரமாக இருந்து வருகின்றன.
2021-22 பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன் கரும்பிற்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 195 ரூபாய் அறிவிக்கப்பட்டு, ஒரு இலட்சத்து 21 ஆயிரம் விவசாயிகளுக்கு மொத்தம் 214 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக, சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்யப்படும் கரும்பு சாகுபடி பரப்பு 2022-23 பருவத்தில் குறிப்பிட்ட அளவைவிட 55,000 எக்டர் அதிகரித்துள்ளது.
கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு. கரும்புப் பதிவு பரப்பு, உற்பத்தியினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்திடவும், வரும் நிதியாண்டில் கீழ்க்காணும் திட்டங்கள் இவ்வரசினால் செயல்படுத்தப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை
தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, 2022-23 அரவைப் பருவத்தில், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,821 ரூபாய்க்கு மேல் கூடுதலாக 195 ரூபாய் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் 253 கோடி ரூபாய் வழங்கப்படும். மொத்தம் 253 கோடி ரூபாய் சுமார் ஒரு இதன்மூலம் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.
கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம்
கரும்பில் உயர் மகசூல், அதிக சர்க்கரைக் கட்டுமானம் அடைந்திடவும், கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவை குறைக்கும் நோக்குடனும், உயர் விளைச்சல், உயர் சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட வல்லுநர் விதைக்கரும்பு. பருசீவல் நாற்றுக்கள் போன்றவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஏழு கூட்டுறவு. பொதுத் துறை சர்க்கரை ஆலைகளின் கரும்புத் தளங்கள் சிமெண்ட் கான்கிரீட் தளங்களாக மேம்படுத்தப்படும். இதற்கென வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
சர்க்கரை ஆலைக் கழிவு மண்ணில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல்
தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.