வங்கக்கடலில் வரும் 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.


சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளரை சந்தித்தவர் ” தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது அதிகபட்சமாக திருப்பூரில் பதினேழு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 இடங்களில் கனமழையும் ஐந்து இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பு பொறுத்தவரை அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.  கனமழை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையில் செய்வதற்கான வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் மேலும் வரும் 26 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும், எனவே ஆழ்கடலில் இருக்கின்ற மீனவர்கள் 26 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை உள்ள காலகட்டத்தில் பதிவான மழை அளவு 24 சென்டிமீட்டர் இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 31 சென்டிமீட்டர் இது இயல்பை விட 15 சதவீதம் குறைவாகும்” என குறிப்பிட்டுள்ளார்.


இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 


தடம் மாறும் மாணவ தலைமுறை; மனநல நிபுணர்கள், காவல்துறை மூலம் ஆலோசனை- சிறப்பாசிரியர்கள்‌ சங்கம்‌ வேண்டுகோள்