கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள விளையாட்டு மையங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
சிலம்பம் சுற்றிய அமைச்சர்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (03/02/2023) துவக்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்ப கலையில் அதிக நாட்டம் உள்ளவர். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைப்பதற்கு முன்னர், நாகர்கோவிலில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அசுர வேகத்தில் சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
வைரலாகும் வீடியோ:
சிலம்ப கலையில் அதிக நாட்டம் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் சிறந்த சிலம்பம் கலை வீரர் போல, மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றியதைப் பார்த்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். குறிப்பாக இளைஞர்கள் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் பலரும் அமைச்சர் மனோ தங்கராஜை பாராட்டினர்.
தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அஒரு தொழில்முறை சிலம்ப விளையாட்டு வீரர் போல, மின்னல் வேகத்தில் சிலம்பம் சுற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், தான் சிலம்பம் சுற்றும் வீடியோவினை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய போது என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.