Tamilnadu Goverment: 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


10 ஐ.பி.எஸ். அதிகாரிகள்:


தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசுத்துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவதும், பதவி உயர்வு வழங்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்.


அதிலும் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக என்று சொல்லும் அளவிற்கு பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். அந்த வகையில் தற்போது, 10 ஐ.பி.எஸ் அதிகாரிகளை டி.ஜ.ஜி.யாக பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன் உள்ளிட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசு உத்தரவு:


பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி. விக்ரமன்,  சரோஜ் குமார் தாகூர்,  டி.மகேஷ் குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர். திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகியோர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  அதைத் தொடர்ந்து, 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு வழங்கி  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனந்த்குமார் சோமானி, ஆர். தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. 


மேலும், 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜெயஸ்ரீ, பி. சாமுண்டீஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ்.முத்துசாமி, என்.எம்.மயில்வாகனன் ஆகியோருக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. 


தொடரும் நடவடிக்கைகள்:


கடந்த மாதத்தில் 14ஆம் தேதி  11 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடைப் பணிகள் தேர்வாணைய உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார்.  காத்திருப்பு பட்டியலிலும் விடுப்பிலும் இருந்த ஏடிஜிபி மகேஸ்வரி தயால், சென்னை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிறைத்துறை அமரேஷ் புஜரி ஏ.டி.ஜி.பி. மாற்றப்பட்டு, முதன்மை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஜி. தர்மராஜன் ஐ.பி.எஸ். சென்னை மாநகராட்சி கிழக்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


 முதன்மை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி பிரமோத் குமார் ஐ.பி.எஸ். மாற்றப்பட்டு, தமிழ்நாடு பொது வழங்கல் விநியோக (டான்ஜெட்கோ) சென்னை, ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் தமிழ்சந்திரன் ஐ.பி.எஸ். மாற்றப்பட்டு, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐ.ஐி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கடலோர அமலாக்கப்பிரிவு எஸ்.பி. சந்திரசேகர் மாற்றப்பட்டு, கோயம்புத்தூர் மண்டல குடிமைப் பொருள் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.