தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு புதிய ஐபிஎஸ் பதவி உயர்வு உத்தரவை அறிவித்துள்ளது. அதன்படி ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வை அறிவித்துள்ளது.
அதன்படி ஏடிஜிபியாக இருந்து வரும் ரவி ஐபிஎஸ், அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ், ஜெயந்த முரளி ஐபிஎஸ் மற்றும் கருணாசாகர் ஐபிஎஸ் ஆகியோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.