சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.


சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சிவக்குமார் ஐ.பி.எஸ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுஜித்குமார், மதுரை அமலாக்க பிரிவின் எஸ்.பி.யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் நகர துணை காவல் ஆணையராக இருந்த லாவண்யா, சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரியின் எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை நகர (வடக்கு) துணை காவல் ஆணையராக இருந்த அரவிந்த், சிவகங்கை மாவட்ட காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


சக்தி கணேசன், உயர்நீதிமன்றம் வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு உதவி ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகேஷ் குமார், சென்னை போக்குவரத்துவடக்கு  காவல்துறை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சக்திவேல், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மகேந்திரன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜராஜன், சேலம் நகர காவல்துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சந்திரமவுலி, சேலம் நகர காவல் தலைமையக துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உமையாள், சென்னை கோயம்பேடு காவல்துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


குமார், சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சரவணன், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரமேஷ் பாபு, மாநில நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


விஜய கார்த்திக் ராஜ், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு மதுரை பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புக்யா சினேக பிரியா, மதுரை நகர வடக்கு காவல்துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செல்வராஜ் போலீஸ் அகாடமியின் நிர்வாக பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீபா சத்யன், பள்ளிக்கரணை காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜோஸ் தங்கையா, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


நேற்றுதான், 27 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்தது. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வட சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். ஐ.ஜி ஆர்.சுதாகர் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.


அதேபோன்று, பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள் , சென்னை காவல்துறை தலைமையக  ஐ.ஜி. யாக நியமிக்கப்பட்டார். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டார்.