தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கான பணியிடமாற்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன்படி மொத்தம் 49 காவல்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 14 பேருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிட மாற்றப் பட்டியலில் 14 பெண் அதிகாரிகளும் அடக்கம். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு துணை ஐ.ஜியாக இருந்த ராஜேந்திரன் ஐ.பி.எஸ். சென்னை கிழக்கின் காவல் மற்றும் சட்ட ஒழுங்கு இணை ஆணையர் மற்றும் துணை ஐ.ஜியாகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை சரக டி.ஐ.ஜியாகப் பொறுப்பு வகித்த நரேந்திரன் ஐ.பி.எஸ்., தென் சென்னையின் காவல் மற்றும் சட்ட ஒழுங்கு இணை ஆணையர் மற்றும் டி.ஐ.ஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிழக்கு சென்னையின் டி.ஐ.ஜி மற்றும் காவல் ,சட்ட ஒழுங்கு இணை ஆணையராக இருந்த வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். மத்திய திருச்சிராப்பள்ளியின் ஐ.ஜி.யாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். பெண் அதிகாரிகளில் திருவாரூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த கயல்விழி ஐ.பி.எஸ். மட்டும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
டி.ஐ.ஜியாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அவர் திருச்சி மாவட்ட ஆயுதக் காவல் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றபடி, சென்னை தலைமைச்செயலக டி.ஐ.ஜியாக இருந்த மகேஸ்வரி ஐ.பி.எஸ். சேலம் சரக டி.ஐ.ஜி.,யாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜிலன்ஸ் மற்றும் லஞ்சஒழிப்புத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ராதிகா ஐ.பி.எஸ்., திருச்சி சரக டி.ஐ.ஜியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த சாமுண்டீஸ்வரி ஐ.பி.எஸ்., சென்னை பெருநகரக் காவல்துறை தலைமையகத்தின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ்