கரூரில் காவல்துறை அனுமதியை மீறி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்கள் நிறைந்த தேங்காய் பால் சத்துணவில் சேர்த்து வழங்க வேண்டும் என கரூரில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பொங்கல் தொகுப்பில் தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் அனுமதியை மீறி பாஜக விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிராக்டர் மீது அமர்ந்தபடி பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். இதில் மாவட்ட பாஜக விவசாய அணி தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட 2000 தேங்காய்கள் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்குவதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பாஜகவினர் அவற்றை திருப்பி எடுத்து சென்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ்,
தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளோம். உரிய விலை கிடைக்காமல் கோடிக்கணக்கான அளவிலான தேங்காய்கள் தேங்கியுள்ளன. எனவே, விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், அவர் ஒரு விவசாயி, அவரது சொந்த மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். திமுக அரசு விவசாயிகள் நலனுக்கு எதிரான அரசு என்றும் தெரிவித்தார்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்தில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம் தூய்மை பணியில் நடந்தது.
சிந்தலவாடி பஞ்சாயத்துக்கான திடக்கழிவு மேலாண்மை மையம் சிங்களவாடி மேம்பாலம் சாலையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படுகிறது. இங்கு தற்போது அதிகமான செடிகள் வளர்ந்ததால் குப்பை தரம் பிரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்ப பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையிட்டார்.