கரூரில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கேக் வெட்டி செவிலியர்களுக்கு ஊட்டி அன்பை வெளிப்படுத்தினார்.


 




சர்வதேச செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மடவிளாகம் தெருவில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையமான, கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில் உள்ள செவிலியர்கள் பணியை போற்றும் வகையிலும், வேலைப்பளுவில் உள்ள மன அழுத்தத்தை போக்கும் வகையில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 


இதில் நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் திவ்யா கேக் வெட்டி செவிலியர்களுக்கு ஊட்டி தனது அன்பை வெளிப்படுத்தினார். மாநகர் நல அலுவலர் இலட்சியவர்ணா உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், செவிலியர்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். அனைத்து செவிலியர்களும் மாறி மாறி கேக் கூட்டிக்கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்


 




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண