சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல்ர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க்-க்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட 5 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், தேனி மாவட்ட எஸ்.பி. டோங்கரே பிரவின் உமேஷ்,சேலம் ரயில்வே டி.எஸ்.பி. குணசேகரன், நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன், காவலர் குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக அரசு வெளியிடுள்ள அறிவிப்பில், அம்பரா சுர்க், தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பெருக்கள் சட்டம். (NDPS Act) சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டள்ளது. மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023ல் 1843 நபர்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது.” என்று குறிப்பிட்டுள்ளது. 


அறிவிப்பின் விவரம்:


ஜெயபத்ரிரநாராயணன்,  காவல் கண்காணிப்பாளர். கோவை மாவட்டம் அவர்களின், போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு அதிரான தடுப்பு: நடவடிக்கைகளினால், போதை பொருட்கள் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்க சீரிய முயற்சிகள் எடுத்துள்ளார். இம்மாவட்டத்தில் இவருடைய தீவிர முயற்சிகளின் காரணமாக 128 கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிரான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், புதிய தலைமுறை செயற்கை போதை பொருட்கள், கஞ்சா சாக்லேட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டு மட்டும். போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கஞ்சா வியாபாரிகள் பலபேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களின் குற்றப்பத்திரிக்கை நாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களை ஈடுபடுத்தியதின் விளைவாக. கோவை மாவட்டத்திலுள்ள 108 கிராம பஞ்சாயத்துகள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது.


டோங்கரே பிரவின் உமேஷ்., காலவ் கண்காணிப்பாளர் திருச்சி மாவட்டம் , திருவெறும்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது, கரூரில் சிறப்பு சோதனை மூலம் நன்கு வளர்ந்த சுமார் 2790 நிலோ எடையுள்ள h84 கஞ்சா செடிகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது ாதைப்பொருள் நடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 3900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 10 வழக்குகளும் அடங்கும். 5-10 குற்றaாரிகள் கைது செய்யப்பட்டு. அதில் 09 குற்றவாளிகள் பொருள் குற்றவாளிகள் என்று குண்டர் சட்டத்தின் கைது செய்யப்பட்டு 22009- கிலோ கிராம் எடையுள்ளகஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


குணசேகரன் காவல் துணை கண்காணிப்பாளர், தலைமையில் அருந்து இரயில் வண்டிகளில் நீண்ட சோதனை மேற்கொண்டதில் 'கஞ்சா வேட்டை2.0" மற்றும் "கஞ்சா வேட்டை3.0"- யின் போது கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட பல குற்றவாளிகளை குண்டர்நடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு 1119 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு 77 குற்றவாளிகளை கைதுசெய்து 131 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூமுருகன், காவல் சார்பு ஆய்வாளார். .இரபுகுமார், முதல் நிலை காலர் 1380, புதுச்சத்திரம் காவல் நிலையம், நாமக்கல் மாவட்டம் ஆகியே இருவரும்  கண்காணிப்பாளர். நாமக்கல் மாவட்டம் அவர்களால் காவல் துணை கண்காணிப்பாளர். நாமக்கல் உட்கோட்டம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண அதிக முயற்சி எடுத்து தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஆதாரங்களை சேகரித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாவட்டங்களுக்கு பயணம் செய்தும் ஆதாரங்களை திரட்டி அவர்களிடமிருந்து குட்கா பறிமுதல் செய்ய உதவியாக இருந்துள்ளார்கள். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த விருதுகள் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.