தமிழ்நாட்டில் முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 நாடுகள் பங்கேற்க உள்ளன.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பபாசி சார்பில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டாலும் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு மாநிலம் முழுவதும் வாசகர்கள் குவிவது உண்டு.
இந்த நிலையில் தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி, 18ஆம் தேதி முடிவடைகிறது. இதில் 40 நாடுகள் பங்கேற்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி, நூலக இயக்குநர் இளம்பகவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வண்ணமயமான தொடக்க விழாவுடன் தொடங்கின. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளிநாட்டவரையும் கவரும் வகையில் மிக பிரம்மாண்ட ஏற்பாடுகள் இவ்விழாவில் செய்யப்பட்டிருந்தன.
தொடக்க விழாவில், பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனவரி 16ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.